கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

உலகளாவிய எரிசக்தி சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (10) சற்று அதிகரித்துள்ளன.

அதற்கமைய, இன்று காலை 6.40 மணி அளவில், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.95 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது 0.85 சதவீத வளர்ச்சியாகும்.

ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 92.33 டொலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது 0.96 சதவீத அதிகரிப்பாகப் பதிவாகியுள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மர்பன் (Murban) கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 88.24 டொலர்கள் வரை குறைந்துள்ளதுடன், இது 3.98 சதவீத வீழ்ச்சியாகக் காட்டப்பட்டுள்ளது.