கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பரிதாபமாக பலியான பெண்...!

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பரிதாபமாக பலியான பெண்...!

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

குறித்த சம்பவம் இன்று (26-08-2026)  காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய அவரது மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி பரிதாபமாக பலியான பெண்...! | Woman Stabbed To Death By Husband In Mannar

தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் வைத்து தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.