சங்குப்பிட்டிப் பாலம் 5 நாட்களுக்கு போக்குவரத்து முழுமையாகத் தடை (07.10.2026 முதல் 12.10.2026) :

சங்குப்பிட்டிப் பாலம் 5 நாட்களுக்கு போக்குவரத்து முழுமையாகத் தடை (07.10.2026 முதல் 12.10.2026) :

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம்–கிளிநொச்சி, நாவற்குழி–கேரதீவு–மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக, எதிர்வரும் 07.10.2026 புதன்கிழமை முற்பகல் 8.00 மணி முதல் 12.10.2026 திங்கட்கிழமை முற்பகல் 8.00 மணி வரை, ஐந்து நாட்களுக்கு சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாகத் தடைசெய்யப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் அறிவித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல் :

குறித்த காலப்பகுதியில் சங்குப்பிட்டிப் பாலம் ஊடாகப் பயணிக்கத் திட்டமிடும் பொதுமக்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகன சாரதிகளும் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருத்தப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக நிறைவடைந்தால், சங்குப்பிட்டிப் பாலம் முன்கூட்டியே போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊடகப் பிரிவு

மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்

சங்குப்பிட்டிப் பாலம் 5 நாட்களுக்கு போக்குவரத்து முழுமையாகத் தடை (07.10.2026 முதல் 12.10.2026) :