தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! 20 நவம்பர்

தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை; நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! 20 நவம்பர்

இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் நகை வாங்க காத்திருப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவின் தாக்கம் இலங்கையின் உள்நாட்டு தங்கச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

இதன்படி, இன்று (20) கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை நிலவரப்படி, ஒரு பவுண் தங்கத்தின் விலை 7,000 ரூபாவினால் குறைந்துள்ளது.

இன்றைய தங்க விலை விபரம்:

  • 22 கரட் தங்கம் ஒரு பவுண் – ரூ.317,400
  • 24 கரட் தங்கம் ஒரு பவுண் – ரூ.345,000

நேற்றைய தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.323,800 ஆகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.352,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இதன் மூலம் ஒரே நாளில் இரு வகை தங்கங்களின் விலையிலும் 7,000 ரூபாய் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,526 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளமையும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்து வருவதால் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.