நாட்டின் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!

நாட்டின் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பியது!

இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த காற்று மாசுபாடு தற்போது படிப்படியாகக் குறைந்து, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த வாரம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டியிருந்தது.

இதனால் பொதுமக்கள், குறிப்பாக சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் வெளிப்புறச் செயற்பாடுகளின்போது அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் அண்மைய காற்றுத் தரக் கண்காணிப்புத் தரவுகளும் மாசுபாடு குறைந்துள்ளதைக் காட்டுகின்றன.

எனினும், பிரதேசங்களுக்கு ஏற்ப காற்றின் தரத்தில் மாற்றங்கள் காணப்படுவதால், பொதுமக்கள் தொடர்ந்தும் அதிகாரப்பூர்வ காற்றுத் தர அறிக்கைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.