
9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம்
9 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகள் செப்டம்பர் 21-ந்தேதி முதல் பள்ளி சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் ஆன்-லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன. என்றாலும், மாணவர்கள் நேரடியாக வகுப்பறை சென்று படித்ததுபோன்று இல்லை. ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்க முடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் அன்லாக் 4-வது கட்டத்தின்போது இதற்கான தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 21-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ - மாணவிகள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது 6 அடி தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகளை சுததப்படுத்துதல், முக்கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.