
மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது! மஹிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
நல்லாட்சி அரசாங்கத்தில் 'வெள்ளை யானை' என்று குறிப்பிடப்பட்ட ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயலுக்கு வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாநாட்டு நிலையத்தை கடந்த அரசாங்கம் பிரயோசனமற்ற 'வெள்ளை யானை' என்று குறிப்பிட்டிருந்தது.
எனினும் மத்தள விமான நிலையத்தைப்போன்று அங்கு நெல் களஞ்சியப்படுத்தி வைக்கப்படவில்லை.
எனவே அந்த நிலையம் எவ்வித சேதமும் இன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
நேற்று அவர் இந்த மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஒன்றுக்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த மாநாட்டு மண்டபத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கொரிய சர்வதேச கழகம் என்பன 15.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணித்தன..
ஹம்பந்தோட்டவின் சிரிபோபுராவில் அமைந்துள்ள இந்த மாநாட்டு மண்டபத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013 நவம்பரில் திறந்து வைத்தார்.
நவம்பர் 2013 இல் நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் மன்றம் அந்த இடத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச மாநாடாக கருதப்படுகிறது.