
வீதிக்கு குறுக்கே விழுந்தது பாரிய மரம் - முல்லைத்தீவில் போக்குவரத்துக்கு தடை
முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதிக்கு குறுக்காக பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடுகளை மக்கள் சந்தித்துள்ளனர்.
வீதிக்கு குறுக்காக மரம் முறிந்து விழுந்ததனால் வீதியின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிராம மக்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் முள்ளியவளை பொலிசார் ஆகியோர் இணைந்து வீதியிலுள்ள மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.