பட்டப்பகலில் யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு..!

பட்டப்பகலில் யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு..!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது  இன்று(16.06.2023) வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

29 வயதுடைய இளைஞர் ஒருவர் மீதே இவ்வாறு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது நண்பனை சந்திப்பதற்காக இளவாலை பகுதிக்கு வந்துகொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட கும்பல் அவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு! | Sword Slashed At A Youth In Yahi In Broad Daylight

இதனையடுத்து குறித்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.