
யாழில் திருட்டு! கமராவில் சிக்கிய திருடன்..!
யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சூப்பர் மார்க்கெட்டினை உடைத்து உள்நுழைந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
16.06.2023 அன்று வெள்ளிக்கிழமை இரவு சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை வழியாக உள்நுழைந்த திருடன் மூன்று இலட்சம் ரூபாய் பணம்,குளிர்பான வகைகள் மற்றும் பால் மா பைக்கற்களை திருடிச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி திருட்டு காட்சி அங்கிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ள நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.