யாழில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நாணயம்: இலங்கை முழுவதும் நடைமுறையாகுமா..! அம்பலமான தகவல்...

யாழில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நாணயம்: இலங்கை முழுவதும் நடைமுறையாகுமா..! அம்பலமான தகவல்...

தங்கள் நாட்டு ரூபாவை இலங்கையில் பயன்பாட்டுக்கு விடுவதற்காக இந்தியா தற்போது முயற்சித்து வருகிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடந்த நல்லாட்சி காலத்தில் தான் மத்திய வங்கி பிணை முறி மோசடி மேற்கொள்ளப்பட்டது. இவர் தான் நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்திய பிரதான நபர்.

யாழில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நாணயம்: இலங்கை முழுவதும் நடைமுறையாகுமா..! அம்பலமான தகவல் | Indian Rupees In Sri Lanka Usage

நாட்டில் இவரால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரப் பிரச்சினையானது, கோட்டாபய ராஜபக்ச காலத்தில் தீவிரமடைந்தது. இதனை நாம் சுட்டிக்காட்டிய போது தான், அரசாங்கத்திலிருந்து நாம் அன்று ஒதுக்கப்பட்டோம்.

இந்த நிலையில், நாட்டின் இந்த பிரச்சினையைப் பயன்படுத்தி தங்கள் நாட்டு ரூபாயை இலங்கையில் பயன்பாட்டுக்கு விடுவதற்காக இந்தியா தற்போது முயற்சித்து வருகிறது.

இப்போதும் யாழில் சில கடைகளில் இந்தியா ரூபா தான் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ரூபாயை இங்கே பயன்படுத்தினால், அந்நாட்டின் சுங்கத்தையும் எமது நாட்டின் சுங்கத்தையும் ஒன்றாக இணைந்து விடுவார்கள்.

யாழில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நாணயம்: இலங்கை முழுவதும் நடைமுறையாகுமா..! அம்பலமான தகவல் | Indian Rupees In Sri Lanka Usage

அப்படியானால், இந்திய பொருட்கள் எதற்கும் சுங்கவரி அறவிடப்பட மாட்டாது. இது இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பாரிய நன்மையாக அமைந்துவிடும்.

இதற்கு தான் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாட்டில் பிரச்சினையொன்றை ஏற்படுத்திய இந்த தரப்பினரால் ஒருபோதும் அந்த பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.