யாழ்ப்பாணத்தில் மருத்துவரின் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல்..!

யாழ்ப்பாணத்தில் மருத்துவரின் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல்..!

யாழ்ப்பாணத்தில் மருத்துவர் ஒருவரின் வீட்டின் மீது நேற்றிரவு பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் மணல்தறை வீதியில் வசிக்கும் மருத்துவரின் வீட்டின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் மருத்துவரின் வீட்டின் வெளிவாசலை உடைத்து உள்நுழைந்து வீட்டின் யன்னல்,கதவுகள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறைக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.