7 நாய்க்குட்டிகள் உயிருடன் எரிப்பு - யாழில் கொடூரம்...

7 நாய்க்குட்டிகள் உயிருடன் எரிப்பு - யாழில் கொடூரம்...

ஒரு மாதம் நிரம்பாத ஏழு நாய்க்குட்டிகளை நபர் ஒருவர் தீயில் போட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கொடூர சம்பவம் சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட மிருசுவில், தவசிகுளம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் வளர்த்து வந்த நாய் ஒன்று 7 குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த குட்டிகள் தாயிடம் பாலுக்காக சத்தமிட்டுள்ளன.

7 நாய்க்குட்டிகள் உயிருடன் எரிப்பு - யாழில் கொடூரம் | 7 Dogs Burned Alive Atrocious Incident In Jaffna

குறித்த சத்தம் தூங்குவதற்கு இடையூறாக இருந்தமையால் குறித்த நபர் கிடங்கு ஒன்றை வெட்டி அதில் தீமூட்டி இந்த ஏழு குட்டிகளையும் எரித்துள்ளார்.

இந்த கொடுமையான சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி காவல்துறையினருக்கும், மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கும் தொலைபேசி மூலம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சாவகச்சேரி காவல்துறைக்கு யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.