
யாழ். கொக்குவில் பகுதியில் வழிப்பறி - கத்தி வைத்து மிரட்டிய மர்ம நபர்கள்..!
யாழ்ப்பாணம் கொக்குவில் தாவடி பகுதியில் நள்ளிரவு வேளை பயணித்த ஒருவரிடம் நகை பணம் கடிகாரம் என்பன வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானிப்பாயை சேர்ந்த நபரிடமே 24 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரம் ஒரு பவுண் மோதிரம் 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபா பணம் என்பவை வழிப்பறி செய்யப்பட்டன இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வீதியில் சென்று கொண்டிருந்த தன்னை ஒருவர் முதலில் மறித்து நிறுத்தினார் என்றும் பின்னர் வந்த மூவரில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட மற்றோருவர் கணத்தில் அறைந்தார் என்றும் பாதிக்கப்பட்டவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.