
குடும்ப தகராறில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த 21 வயது குடும்பஸ்தர் - யாழில் சம்பவம்..!
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம்(20) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்தார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.