
அனலைதீவு வைத்தியசாலையில் முரண்பாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டவர் பொலிஸாரால் கைது..!
அனலைதீவு பிரதேச வைத்தியசாலையில் பொலிஸாருடன் சென்று முரண்பாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டவரொருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவு வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியர் மற்றும் பெண் ஊழியர்களுடன் குறித்த சந்தேகநபர் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வடமாகாண சுகாதார பணிமனை ஆகியோருக்கு முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டுச் சம்பவத்தை உறுதிசெய்யும் முகமாக வைத்தியசாலை கண்காணிப்பு கமராவின் காணொளியும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றின் அடிப்படையில் தற்போது வெளிநாட்டுப் பிரஜை ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவருடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.