
யாழ். புங்குடுதீவு கண்ணகை அம்மனின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம்(25.06.2023) ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 22ஆம் 23ஆம் திகதிகளில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரையும் 24ஆம் திகதி காலை 9 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை நடைபெறும் எண்ணைக்காப்பு நிகழ்வுகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.