தெல்லிப்பளையில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது..!

தெல்லிப்பளையில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது..!

யாழ்.சுன்னாகம் மற்றும் தெல்லிப்பளை காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் யாழ்.காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளவெட்டி பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் சுமார் 5 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை மாவட்ட குற்ற தடுப்பு காவல்துறை பிரிவின் காவல்துறை பரிசோதகர் நிதரஷன் தலைமையிலான காவல்துறை குழுவினர், நடத்திய விசாரணைகளில் அளவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயது மற்றும் 25 வயதான இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பளையில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது..! | Two People Arrested Connection Several Robberies

கைதான சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையடித்த இலத்திரனியல் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

கைதான சந்தேக நபர்கள் தெல்லிப்பளை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் கைதான சந்தேகநபர்கள் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக கூறியுள்ள காவல்துறையினர் மேற்படி இரு காவல்துறை பிரிவுகளிலும் அண்மைய நாட்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் காவல்துறையினரை கேட்டுள்ளனர்