யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு நேர்ந்த கதி...!

யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு நேர்ந்த கதி...!

யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த  திருட்டுச் சம்பவம் நேற்று முன்தினம் (26.06.2023) பரமேஸ்வராசந்தியில் கடையொன்றில் இடம்பெற்றுள்ளது.

தொலைபேசி பறிகொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரினால் இன்றைய தினம் (28.06.2023) கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சி.சி.ரி.வி கமரா உதவியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி எதுவும் கிடைக்கவில்லை.

யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு நேர்ந்த கதி | Two People Arrested For Phone Theft In Jaffnaகுறித்த தொலைபேசியை அடையாளம் தெரியாத நபர் ஒருவருக்கு 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.

இன்றைய தினம் தொலைபேசி திருத்துமிடத்திற்கு குறித்த சந்தேக நபர் தொலைபேசியுடன் வந்த பொழுது யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.