யாழில் எதிர்ப்புக்கு மத்தியில் எழும் தொலைத் தொடர்பு கோபுரம் - நாளை கவனயீர்ப்புப் போராட்டம்..!

யாழில் எதிர்ப்புக்கு மத்தியில் எழும் தொலைத் தொடர்பு கோபுரம் - நாளை கவனயீர்ப்புப் போராட்டம்..!

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை (01) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டுவரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழில் எதிர்ப்புக்கு மத்தியில் எழும் தொலைத் தொடர்பு கோபுரம் - நாளை கவனயீர்ப்புப் போராட்டம்! | Protest Against Of Telecommunications Tower Jaffna

குறித்த பகுதியில் நெருக்கமாகக் குடிமனைகள் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு அதனை அமைத்து வரும் நிறுவனத்திடம் கோரி இருந்தனர்.

இதேவேளை அப் பணிகளை நிறுத்துமாறு சுன்னாகம் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

இதனாலேயே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.