யாழில் நபர் ஒருவரை கடத்திய இளைஞர்கள்: பொலிஸார் நடவடிக்கை...

யாழில் நபர் ஒருவரை கடத்திய இளைஞர்கள்: பொலிஸார் நடவடிக்கை...

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இளைஞர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

நல்லூர் அரட்டியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால்தான் பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்கியதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

யாழில் நபர் ஒருவரை கடத்திய இளைஞர்கள்: பொலிஸார் நடவடிக்கை | Youth Kidnapped A Person In Jaffnaநேற்று (30.06.2023) பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி உந்துருளியில் வந்த இருவரினால் இழுத்து ஏற்றிக் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். 

அவரை கடத்திச் சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளிப் பதிவு செய்துள்ளதுடன், அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பேரில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்தவின் கீழ், பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையில் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழில் நபர் ஒருவரை கடத்திய இளைஞர்கள்: பொலிஸார் நடவடிக்கை | Youth Kidnapped A Person In Jaffnaசம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே பழக்கடை வியாபாரியைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பழக்கடை வியாபாரியிடம் பழம் வாங்கச் சென்ற பெண் ஒருவருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.

அதுதொடர்பில் கேட்கச் சென்றவரின் கழுத்தில் கத்தியை வைத்து பழக்கடை வியாபாரி மிரட்டியுள்ளார். அதனால்தான் அவரை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினோம் என்று சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்" என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மற்றும் கடத்தலுக்குள்ளான மோட்டார் சைக்கிள் கத்தி தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.