
இம்முறையாவது ஐ.நா எமக்கு நீதியை வழங்குமா..! காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்கவேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.
போராட்டகாரர்களை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறை புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.