யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மாணவிகளுக்கு குவியும் பாராட்டு ...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மாணவிகளுக்கு குவியும் பாராட்டு ...

யாழ்.பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகள் பளுத்தூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.

கேகாலை- பிலிமத்தலாவை மத்திய கல்லூரியில், நேற்று முன்தினம் (01.07.2023) இலங்கை பாடசாலை பளுத்தூக்கல் சங்கம் தேசிய பளுதூக்கல் போட்டியை நடத்தியது.

இந்த தேசிய மட்ட பளுத்தூக்கல் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது.

அந்தவகையில் வி.ஜெஸ்மினா என்ற மாணவி 18 வயதுப்பிரிவில் 71கிலோ எடைப்பிரிவில் 92 கிலோகிராம் தூக்கி தங்கப்பதக்கத்தையும், இ.ரம்யா என்ற மாணவி 20 வயதுப்பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் 65 கிலோகிராம் தூக்கி வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மாணவிகளுக்கு குவியும் பாராட்டு (Photos) | Outstanding Female Students

யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித்தந்த இந்த மாணவிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

Gallery Gallery Gallery