
முகநூல் காதலால் உயிரை மாய்த்த இளைஞன் - யாழில் சம்பவம்...
யாழ்ப்பாணம் - இருபாலை கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞனின் சடலமானது நேற்றையதினம் (03.07.2023) தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் முகநூல் வழியாக பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவர் தொடர்பை துண்டித்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.