லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் குளிக்கச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடலில் மூழ்கிய குறித்த சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த சிறுவன் நீரில் மூழ்கி பலி! | Death Police Investigating Srilanka Jaffna

லண்டனில் இருந்து உறவினரின் மரணச் சடங்குக்கு வந்திருந்த குருபரன் ஆரூஸ் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.