யாழில் இலவச வகுப்புகள் என தெரிவித்து மாணவிகள் வன்புணர்வு..!

யாழில் இலவச வகுப்புகள் என தெரிவித்து மாணவிகள் வன்புணர்வு..!

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பலாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , புதன்கிழமை (12) , தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடத்தியுள்ளனர்.

யாழில் இலவச வகுப்புகள் என தெரிவித்து மாணவிகள் வன்புணர்வு | Two Female Students Were Raped In Jaffna

இதன்போது , 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்​தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.