யாழில் நால்வர் கைது..!

யாழில் நால்வர் கைது..!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ் 200 மில்லிக்கிராம், கஞ்சா 1400 மில்லிகிராம் மற்றும் 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் நால்வர் கைது | Four Arrested In Jaffna

காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த இருவர், புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த இருவர் உட்பட 20 முதல் 30 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், சந்தேகநபர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.