யாழில் பாடசாலையில் வைத்து மாணவிக்கு நடந்த கொடுமை - அதிபர் கைது

யாழில் பாடசாலையில் வைத்து மாணவிக்கு நடந்த கொடுமை - அதிபர் கைது

யாழ் - தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

யாழில் பாடசாலையில் வைத்து மாணவிக்கு நடந்த கொடுமை - அதிபர் கைது | Principal Assaulted Student In The School Jaffna

 

குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், ஊர்காவல்துறை காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபரை நாளை திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.