
யாழ் - அச்சுவேலி காவல் நிலையம் முன்பாக குடும்பஸ்தர் போராட்டம்..!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிய முற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் அச்சுவேலி காவல் நிலையம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
தகராறு காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் காவல்துறையினர் பக்கச் சார்பாக தனக்கு எதிரான முறைப்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்தே பெட்ரோலுடன் வந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை அங்கிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.