யாழில் சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை: பொலிஸார் நடவடிக்கை..!

யாழில் சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை: பொலிஸார் நடவடிக்கை..!

நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் தாயின் கணவர் நெருப்பால் சுட்டதில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

யாழில் சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை: பொலிஸார் நடவடிக்கை | Jaffna Boy In Hospital

கை, முகம் எனப் பல இடங்களிலும் காயங்கள் காணப்படுகின்றது என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவ்வாறு தீக் காயத்திற்கு இலக்கான சிறுவன் அந்தத் தீப்புண்ணுடன் நேற்றைய தினம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

அதனை அவதானித்த ஆசிரியர்கள் அவனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுவனிடம் வாக்குமூலம் பெற்றுள்ள பொலிஸார், சட்ட நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளனர். 

விசாரணையின்போது தனது கணவரைப் பாதுகாக்கும் நோக்கில் தானே மகனுக்குச் சூடு வைத்ததாகத் தாயார் தெரிவித்துள்ளார்.