யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்..!

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்..!

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் (PHOTOS) | Jaffna Navanthurai Team Attackநேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இன்றைய தினம் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் (PHOTOS) | Jaffna Navanthurai Team Attackகுறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் பொதுப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்றநிலை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.