யாழில் பாடசாலை அதிபர் நியமனத்தை எதிர்த்து போராட்டம்..!

யாழில் பாடசாலை அதிபர் நியமனத்தை எதிர்த்து போராட்டம்..!

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் புதிதாக கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்த அதிபரை நியமிப்பதற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்றையதினம் (17.07.2023) பாடசாலை வளாகத்தின் முன் இடம்பெற்றுள்ளது.

யாழில் பாடசாலை அதிபர் நியமனத்தை எதிர்த்து போராட்டம் (Photos) | Protest Against School Principal Appointment

ஏற்கனவேயிருந்த அதிபர் ஓய்வுபெற்ற நிலையில் புதிய அதிபர் வெற்றிடத்திற்கு பத்திரிகையில் விண்ணப்பம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இருவர் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தும் ஒருவர் உரிய தகைமையின்மையால் நிராகரிக்கப்பட்டதுடன் மற்றைய விண்ணப்பதாரிக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்று முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பாடசாலை அதிபர் நியமனத்தை எதிர்த்து போராட்டம் (Photos) | Protest Against School Principal Appointment

இந்நிலையில் புதிதாக கிறிஸ்தவ அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சமயத்தை பாதுகாக்க தனியார் வகுப்புக்களை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுத்த நிலையில் அதே நிர்வாக கட்டமைப்பு மட்டங்களிலுள்ள அதிகாரிகள் மத முரண்பாட்டினை ஏற்படுத்தும் இவ்வாறான யெற்பாடுகளை முன்னெடுப்பது பொருத்தமானதல்ல என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை பாடசாலைக்கு கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த அதிபரின் நியமனத்தை நிறுத்துமாறு கோரி ஆளுநருக்கு கடிதமும் அனுப்பப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.GalleryGalleryGalleryGallery