வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று (19.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், தற்போது வடக்கில் மதுபான பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதுடன் இன்சுலின் உற்பத்தி தடைப்படுகின்றது. 

வடக்கில் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Drug Use In North Province Jaffna

மதுபாவனை மற்றும் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். குறிப்பாக இளையவர்கள் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.

இதனால் அவர்களை அறியாமலே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

இந்த மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.