
வடமராட்சியில் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு..!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், நேற்றையதினம்(19) சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படை முகாமில் வைத்துள்ள மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.