கடன் தொல்லையால் குடும்பம் எடுத்த விபரீத முடிவு -கிராமமே அதிர்ச்சியில்..!

கடன் தொல்லையால் குடும்பம் எடுத்த விபரீத முடிவு -கிராமமே அதிர்ச்சியில்..!

கடன்தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கோவை வடவள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோவை வடவள்ளி பகுதியில் ராஜேஷ், லக்சயா தம்பதிகள் வாழ்ந்து வந்தனர் இவர்களுக்கு யக்சிதா என்ற குழந்தையுடன் ராஜேஷ் இன் அம்மா பிரேமா என்பவரும் வாழ்ந்து வந்தனர்.

கடன் தொல்லையால் குடும்பம் எடுத்த விபரீத முடிவு -கிராமமே அதிர்ச்சியில் | Four Members Of Family Suicide At Coimbatore

இந்த நிலையில் ராஜேஷ் குடும்பத்திற்கு கடன் தொல்லை அதிகமான நிலையில் கடன்காரர்கள் கடனைக் கேட்டு நெருக்கியதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜேஷ் தூக்கில் தொங்கியும் அவரது மனைவி லக்சயா, மகள் யக்சிதா தாயார் பிரேமா ஆகியோர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாகவும் கடன் காரர்கள் நெருக்கியதால்தான் தற்கொலை செய்து கொண்டனர் என தெரிய வந்துள்ளது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது