யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக... - வெளிவரும் மர்மம்.

யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக... - வெளிவரும் மர்மம்.

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியொருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை முதலி கோவிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்கிற 17 வயதான சிறுமியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக... - வெளிவரும் மர்மம் (படம்) | Dead Body Of A Girl Recovered From Jaffnaஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த நான்கு மாதங்களாக சிறுமி கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள குறித்த வீட்டில் தங்கி நின்று வீட்டுப் பணி புரிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தினர் நிகழ்வொன்றுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் குறித்த சிறுமி தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமியை பார்க்க யாரும் வரக்கூடாது என்று தெரிவித்த வீட்டு உரிமையாளர் மாதத்தில் ஒரு முறை மாத்திரம் கதைக்கமுடியுமென தெரிவித்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டுவதுடன் இவ் உயிரிழப்பில் மர்மம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சடலத்தை பார்வையிட்ட தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமி சடலமாக... - வெளிவரும் மர்மம் (படம்) | Dead Body Of A Girl Recovered From Jaffna

சிறுமி வீட்டார்களுடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை வழங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் அறியமுடிகிறது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உடற்கூற்றாய்வு பரிசோதனையின் பின்னரே உறவினரிடம் கையளிக்கப்படும் என்பதுடன் முழுமையான விடயங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.