
யாழ். வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்பு..!
மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் இருந்து பெருமளவிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த மீட்பு சம்பவமானது இன்று காலை(24.07.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா பொதிகள் கைமாற்றப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கடற்படையினரால் இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் 86.7 கிலோ எடையுடையவை என கூறப்படுகிறது.
கடற்படையினர் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.