அமெரிக்காவிலிருந்து வெளிவந்த எச்சரிக்கை! நாமல் விடுத்துள்ள அவசர கோரிக்கை

அமெரிக்காவிலிருந்து வெளிவந்த எச்சரிக்கை! நாமல் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் தேர்தல்களின் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீட்டை முடிவுக்கு கொண்டுவரப்போவதாக ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜோ பிடென் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச,

ஜோ பிடென் வெளிநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு எதிராக கடுமையாக செயற்படப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஸ்ரீலங்கா போன்ற வெளிநாட்டு அரசாங்கங்கள் அமெரிக்கா தங்கள் தேர்தல்களில் தலையிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.