இன்றைய ராசிபலன் - 17.03.2025

இன்றைய ராசிபலன் - 17.03.2025

மேஷம்: அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். திட்டமிட்ட வேலை இன்று முடியும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பரணி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.கார்த்திகை 1: கூட்டுத்தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செயல்களில் நன்மை உண்டாகும். வருமானம் உயரும் நாள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரோகிணி: உடல்நிலை சீராகும். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலையில் லாபம் அடைவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். நினைத்த வேலை நினைத்தபடி நடத்தி லாபம் காண்பீர். வழக்கு சாதகமாகும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதை நடத்தி முடிப்பீர். குடும்பக் குழப்பம் விலகும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் லாபமாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பல நாள் பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சியில் எதிர்பார்த்த பலன் தள்ளிப்போகும். நெருக்கடிகளை சந்திப்பீர்.பூசம்: நண்பர்கள் உதவி இன்று நன்மை தரும். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த தகவல் வரும்.ஆயில்யம்: உழைப்பு அதிகரிக்கும். வியாபார போட்டியாளர் விலகுவர். மனக்குழப்பம் விலகும். செலவிற்கேற்ற பணம் வரும்.

சிம்மம்: மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: உத்திரம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் தேடிவருவர்.அஸ்தம்: உங்கள் வேலை எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும்.சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்: சித்திரை 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இன்று இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.சுவாதி: உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்வது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்: விசாகம் 4: செலவு அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் நிறைவேறாமல் தள்ளிப்போகும்.அனுஷம்: எதிர்பாராத செலவு தோன்றி சங்கடப் படுத்தும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.கேட்டை: குடும்பத்தில் குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னை தேடிவரும். வாகனத்தில் செலவு தோன்றும்.

தனுசு: மூலம்: லாபமான நாள். வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்கள் வாங்குவீர். நெருக்கடி விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: திட்டமிட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு தேடிவரும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர்.திருவோணம்: வாடிக்கையாளர் அதிகரிப்பர். முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம்.அவிட்டம் 1,2: நினைத்த வேலைகளை நடத்தி முடித்து வருமானம் காண்பீர். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.

கும்பம்: அவிட்டம் 3,4: தடை விலகும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். சிறு வியாபாரத்திலும் லாபம் அதிகரிக்கும்.சதயம்: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.பூரட்டாதி 1,2,3: விஐபிகள் ஆதரவால் வேலை நடக்கும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.

மீனம்: பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும்.உத்திரட்டாதி: மனக்குழப்பம் ஏற்படும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இன்று எதிராவர். குடும்பத்தில் அமைதி காப்பது நல்லது.ரேவதி: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.