இன்றைய ராசிபலன் - 27.03.2025

இன்றைய ராசிபலன் - 27.03.2025

மேஷம்: அசுவினி: லாபமான நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும். வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.பரணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும். கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தினப் பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.ரோகிணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பெரியோர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி சாதிப்பீர். உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்.திருவாதிரை: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை மாறும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். பெரிய மனிதர்கள் உதவி கிடைக்கும்.

கடகம்: புனர்பூசம் 4: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூசம்: முயற்சி இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: நெருக்கடிக்கு ஆளாவீர். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் விலகும்.

சிம்மம்: மகம்: மகிழ்ச்சியான நாள். விருப்பம் பூர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். பிறரை அனுசரித்துச்சென்று உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.

கன்னி: உத்திரம் 2,3,4: வழக்கில் வெற்றி காணும் நாள். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். எதிரிகள் உங்களை விட்டு விலகுவர்.அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும்.சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.

துலாம்: சித்திரை 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள்.நேற்றைய முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.சுவாதி: செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிலும் போராடி வெற்றி பெறுவீர். நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும்.விசாகம் 1,2,3: வியாபார நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரிகளின் சங்கடம் நீங்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் திருப்தி ஏற்படும். அனுஷம்: தாய்வழி உறவினருடன் பேசும் போது சங்கடம் தோன்றும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.கேட்டை: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொதுவாழ்வில் உள்ளோரின் செல்வாக்கு உயரும்.

தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். நிதிநிலை உயரும். பணியாளர் விருப்பம் பூர்த்தியாகும்.உத்திராடம் 1: நேற்று முடியாமல் இருந்த வேலை இன்று முடியும். உங்கள் திறமை பளிச்சிடும். சகோதரர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திருவோணம்: தடைபட்ட வருவாய் மீண்டும் வரும். உங்கள் செயல்கள் எளிதாக நிறைவேறும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.அவிட்டம் 1,2: நேற்றைய விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். புதிய பொருள்கள் சேரும். செல்வாக்கு உயரும்.

கும்பம்: அவிட்டம் 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள்.செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.சதயம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் எடுத்த வேலையில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் வேலைகளில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.பூரட்டாதி 1,2,3: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விழிப்புடன் செயல்படுவீர். எதிர்பார்த்ததை அடைவீர். வரவு அதிகரிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவு ஏற்படும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.உத்திரட்டாதி: உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். உத்தியோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும்.ரேவதி: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வதால் லாபம் காண முடியும்.