இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளதாக

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11,367 ஆகும்.  

குறித்த விடயம் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுககளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டின் முதல் சில நாட்களில் ரஷ்யாவிலிருந்து 8,425 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,067 பேரும், ஜெர்மனியிலிருந்து 5,306 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 3,285 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் | Top Tourists Visited In First Eight Days January

2025 ஜனவரியில் மொத்தம் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்தனர்.

இந்தியாவில் இருந்து மொத்தம் 11,367 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர், இது மொத்த வருகையில் 17.0% ஆகும்.

மேலும், கடந்த ஆண்டில் மொத்தமாக 2,362,521 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.