இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2026

இன்றைய ராசி பலன் 04 ஜூலை 2026

மேஷம் ராசி பலன்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் உங்களுடைய லாப ஸ்தானத்தில் இருப்பதும், சனி பன்னிரண்டாம் வீட்டிலும் இருப்பதால் உங்களுடைய, பணியிடத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கான முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் வந்தடையும். உங்களுடைய வரவு செலவுத் திட்டத்தை கவனமாக பராமரிக்கவும். இன்று பணியிடத்தில் வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.இனிய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதியான சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய செயல்பாடுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பணிகள் வேகமாக முடிக்க முடியும். உலகு இன்பங்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய ஆடம்பர செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. செலவுகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்; அவர்களின் கருத்துக்களைக் கேட்பது பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பேச்சில் இனிமையை கடைபிடிப்பது நல்லது.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரனும், ராகுவும் இருப்பதால், இன்று அரசு ரீதியான கௌரவமும் சமூக அந்தஸ்தும் உங்களுக்குக் கிடைக்கும். தொழில் நல்லது வியாபாரம் செய்தால் அதில் கூட்டாளிகள் மற்றும் உங்கள் மனைவியிடமிருந்து முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய கடன் சுமை குறையும். கும்ப ராசியில் உள்ள ராகுவால் நெருப்பு தொடர்பான சில ஆபத்துக்கள் ஏற்படலாம். இன்று உங்களுடைய தனிப்பட்ட முயற்சிகளை அதிகரிக்க வேண்டிய நாள். இது உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று கடக ராசியில் குருவும், எட்டாம் வீட்டில் சந்திரனும் இருப்பதால், இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இதனால் உங்களுடைய உறவுகளை அனுசரித்துச் செல்வது, செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். உங்களுடைய முயற்சிக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்குச் சிறந்த செல்வமும் நீண்ட காலமாகத் தேங்கியிருந்த பணமும் கிடைக்கும். புதிய உறவுகள் உறுதியாகும். அரசியல் மற்றும் சமூகத் துறைகளிலும் உள்ளவர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது; மன அழுத்தம் மற்றும் குழப்பம் காரணமாக அன்றாடப் பணிகள் மற்றும் பயணங்களில் தடைகள் ஏற்படலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அன்புக்குரியவர்கள் மற்றும் பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட முயன்றால், உறவில் இனிமையிலும், மனநிறைவு அடைவீர்கள். அவ்வப்போது மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்கலாம் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. பணியிடத்திலும் கூட, குழுப்பணியின் மூலம் எந்தவொரு சிக்கலையும் தீர்ப்பதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். இன்று ஒரு மங்கல விழாவில் மகிழ்ச்சியாகக் கழியும்.உங்களுடைய பேச்சை திறமையால் புதிய ஒப்பந்தம் பெற வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ராகு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சந்திரன் ஆறாம் வீட்டில் இருப்பதால், நெருங்கிய நண்பர்களுடன் தேவையற்ற மற்றும் பயனற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். உங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் கவனம் தேவை. அதன் மூலம், உங்களைச் சுற்றி ஒரு இனிமையான சூழலை உருவாக்க முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். பெண் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவளிக்கக்கூடும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறந்த மனிதர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்பு அமையும் நாளாக இருக்கும். திடீர் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் நீங்கள் பயனடையலாம். ஒரு புதிய முயற்சியை மேற்கொள்வதற்கு முன் அதில் உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை கவனமாகப் பரிசீலித்த பின்னரே முடிவுகளை எடுங்கள். வீட்டில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதற்கான வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய தொழில் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். வேலையோ அல்லது வீடோ, எங்குமானாலும் உங்கள் பொறுப்புகள் அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் நீங்கள் ஆலோசனை பெற வேண்டியிருக்கலாம். நாளின் பிற்பகுதியில் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். இன்று உங்கள் வேலை மற்றும் செயல்பாடுகளில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதால் மரியாதை அதிகரிக்கும்.உங்களுடைய புதிய முயற்சிகள், சூழலுக்கு ஏற்ற செயல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாகும். கடந்த காலக் கடமைகளிலிருந்து, கடினமான சூழலில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கலாம். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படும். அத்தியாவசியமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வேண்டியிருக்கலாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். இன்று உங்களுடைய வேலை மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கு திட்டமிடுங்கள். என்ற சிந்தனை உங்களுடைய பொறுமையை சோதிக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் இருக்கும் சந்திரன் நிதி நிலையே மேம்படுத்த வாய்ப்புகளை தருவார். வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணங்களையும், ஒரு முக்கிய வெற்றியை அல்லது மேலாதிக்கத்தை அடைவதையும் குறிக்கிறது. உடன்பிறந்தவரின் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். பழைய நண்பர் அல்லது உறவினர் சந்தித்து பேசி மகிழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். யாரேனும் கடன் கேட்டால், சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. எந்த ஒரு பெரிய நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன் அது தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரிக்கவும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் தன ஸ்தானமான இரண்டாம் வீட்டில் இருப்பது அரசியல் வெற்றிக்கு வழிவகுக்கும்; தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் மனதில் நம்பிக்கையை தரும். எந்த ஒரு போட்டியில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. நாளின் பிற்பகுதியும் மங்களகரமாக அமையும்; செலவுகள் உங்கள் புகழை அதிகரிக்கும். அறப்பணிகளுக்காகவும் செலவுகள் ஏற்படலாம். விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி, வேலை தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதும், 12ம் வீட்டில் உள்ள சந்திரனும் உங்களுக்குச் சிறந்த செல்வ வளத்தை அருளுவார். தொலைந்துபோன அல்லது முடங்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உங்கள் ஆலோசனைத் திறனால், கடினமான சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அவை தீர்க்கப்படலாம். உங்கள் தொழில் பொறுப்புகளைக் கூர்மையாகக் கவனத்தில் கொண்டு வரவும். உங்கள் தொழில் முன்னேற்றம் பெரிய ஆரவாரமாக இல்லாமல், அமைதியாகவும் மெதுவாகவும் இருக்கும்.