இன்றைய ராசி பலன் 12 ஜூன் 2026

இன்றைய ராசி பலன் 12 ஜூன் 2026

மேஷம் ராசி பலன்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று, சந்திரன் உங்கள் இராசியில் சஞ்சரிப்பது உங்களுக்கு வலுவான நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு இன்று குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் தொழில் தொடர்பாக ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசாங்கத்திடமிருந்து சிறப்பு மரியாதை பெறலாம். பொருளாதார நிலை நல்ல முன்னேற்றத்தை காணும். இன்று நீங்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். நீங்கள் செய்யக்கூடிய சுக செலவுகள் சமூகத்தில் உங்கள் மீதான நற்பெயரை அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கவனம் புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும். புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்வது, அல்லது சில திட்டமிடுவது மனதிற்கு அமைதியைத் தரும். சட்டம் தொடர்பான பிரச்சனைகளில் வெற்றியும், இடம் மாற்றமும் கிடைக்கும். உங்களுடைய தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற மகிழ்ச்சியான மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலையில் சாதகமான சூழல் உருவாகும். குறிப்பாக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். உங்களுடைய படைப்பாற்றல், கலை தொடர்பான வேலைகளை முடிக்க உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் மிகவும் விரும்பி செய்யக்கூடிய வேலைகள் வேகமாக முடியும். இன்று நீங்கள் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். புதிய திட்டங்களும் மனதில் தோன்றும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்களுடைய மனதை இலகுவாக வைத்திருக்க முயற்சி செய்யவும். இது செயல்களை தைரியமாக செய்து முடிக்க உதவும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாள். இன்று எந்த ஒரு வேலையும் அர்ப்பணிப்புடன் செய்தால், அதற்கான பலன்கள் உடனடியாக பெறலாம். இந்த காலமாக முடிக்கப்படாத பணிகள் முடிவடையும், குடும்பத்தில் சில முக்கிய விவாதங்கள் நடைபெறும். அலுவலக பணிகளை முடிப்பதில் புதிய யோசனைகளுடன் செயல்படுவீர்கள். மேலும் உங்கள் சக ஊழியர்களின் ஆதரவு கடின வேலையை கூட முடிக்க உதவும். மாலை நேரத்தில் செல்ல மங்கள நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருந்தாலும், ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் உங்களுடைய ஈடுபட அதிகரிக்கும். உங்கள் வேலையை முடிக்க புத்திசாலித்தனமான செயல்பட தேவைப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள், சக ஊழியர்கள் சற்று தொந்தரவு தர வாய்ப்பு உண்டு. இன்று எதிலும் ஒழுக்கமான அணுகுமுறை தேவைப்படும். புதிய நேர்காணல் போன்ற விஷயங்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சு மற்றும் தொடர்புகளில் நிதானத்தையும் எச்சரிக்கையையும் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் எந்த வித மோதலிலும் ஈடுபடாமல் கவனமாக இருங்கள். உங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த விவாதங்கள் எழலாம். உங்கள் உங்கள் வேலையை முடிப்பதில் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். கடினமான சூழல் இருந்தாலும் இரவில் நிலைமை மேலும் மேம்படும். தொழில் தொடர்பாக சில கடினமான முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்க புது வித முயற்சிகளை எடுப்பீர்கள். புதிய வேலைக்கான திட்டங்களை தொடங்கலாம். குடும்பத்தினர் அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சொத்து சம்பந்தமாக சில பிரச்சனைகளை உருவாக்க முயற்சி செய்யலாம். மாணவர்கள் படிப்பு தொடர்பாக நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். போட்டி தேர்வில் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு செலவுகளை செய்வதை அவசியம். உங்களுடைய தொழில், வியாபாரம் தொடர்பாக நாள் முழுவதும் உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இன்று உங்களின் விடாமுயற்சி கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும் ஸ்திரதன்மை அனுபவிப்பீர்கள். இன்று உங்களுடைய உங்கள் வேலை அல்லது வியாபாரத்தில் புதுமைகள் எதிர்காலத்தில் பலன்களைத் தரும். உங்கள் வேலை தொடர்பான முயற்சிகள் புத்துயிர் பெறும்.

தனுசு ராசி ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று எதிலும் நிதானமாகவும் மற்றும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக எடுக்கும் சிறிய ரிஸ்க் கணிசமான லாபத்தை தரும். புதிய சிந்தனையில் உங்களுடைய மூளையில் தோன்றும். காதல் தொடர்பாக மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். சிலரும் புதிய காதல் மனதில் மலரும்.இன்று உங்களுடைய தொழில் முன்னேற்றம் பெற்று மெதுவாக இருக்கும். அலுவலகத்தில் வேலை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியது இருக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று ஒரு சாதகமான நாள். கூட்டுத் தொழிலில் செய்யக்கூடிய நபர்களுக்கு குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். உங்களுடைய அன்றாட வீட்டு வேலைகளை முடிக்க இன்று ஒரு பொன்னான வாய்ப்பாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் தொடர்பான சில முக்கிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். இன்று எதிலும் நேர்மறை சிந்தனை உடன் செயல்படவும். ஒரே நேரத்தில் பல பணிகளை செய்து முடிக்க வேண்டிய சூழல் இருக்கும். எதிர்காலம் தொடர்பாக சில பயனுள்ள திட்டங்களில் ஈடுபடுவீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்பாக கவனமாக இருக்கவும். பருவநிலை மாற்றம் உடல் நலன நலனில்உங்களுக்கு தொந்தரவு தர வாய்ப்புகள் உண்டு. அதனால் உணவு விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். இந்த தொழில் தொடர்பான விவகாரங்களில் இனிமையான பலனை பெறுவீர்கள். இன்று எதிலும் அவசரம் பட வேண்டாம். எதையும் சிந்தித்து நிதானமாக செயல்படுவது அவசியம்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வேலை, வியாபாரம் தொடர்பாக எடுக்கும் சிறிய புது முயற்சிகள் சாதகமான பலனை தரும். உங்கள் வேலை தொடர்பாகவும் குடும்பத்திலும் பொறுமை, புத்திசாலித்தனம் தேவை. இன்று தேவைப்படும் சிலருக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் முறை பயணங்கள் எதிர்பார்த்த நல்ல பலனை தரும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். அதே சமயம் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.