அனுமனுக்கு மிகவும் பிடித்த சாவான் 2026: ஆஞ்சநேயரின் அருளால் சவால்களிலிருந்து வெற்றி பெற உள்ள ராசிகள்
அனுமன் சிவபெருமானின் 11 ஆவது அவதாரமாக புராணங்கள் கூறுகின்றன. இப்பொழுது நடக்கக்கூடிய சாவான் மாதத்தில் (தமிழ் நாட்காட்டியில் இது பொதுவாக ஆவணி மாதத்திற்கு ஈடானதாகும்) சிவபெருமான் தான் நீதிபதியாக அருள் செய்து வருகின்றார். இந்த இடத்தில் அனுமனின் சிறப்பான அருளை இந்த மாதத்தில் பெறக்கூடிய ராசிகள் யார், அவர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்னென்ன இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
![]()
சிவபெருமானின் பதினொன்றாவது அவதாரமாக ஆஞ்சநேயர் அவதரித்ததாக கருதப்படுகிறது. இவர் சாகசமான செயல்களை செய்யவும், மிகவும் வலிமையான உருவத்துடன் காட்சி அளிக்கக்கூடியவர். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் அனுமானை வழிபாடு செய்து வர பலம் அதிகரிக்கும். சனி கிரகத்தின் எதிர்மறை தாக்கத்தை கூட இவருடைய அருள் இருந்தால் நீங்கும். அப்படிப்பட்ட அனுமனின் சிறப்பான அருள் மேஷம் விருச்சிகம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு இந்த சாவன மாதத்தில் அற்புதமாக கிடைக்கும்.
மேஷ ராசி
![]()
மேஷ ராசி அதிபதியான செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தை சஞ்சாரம் செய்து வருகின்றார். அனுமனின் அருள் பெற்ற மேஷ ராசியை சேர்ந்தவர்கள் மேற்கொள்ள கூடிய எந்த ஒரு பயணத்திலும் சரியாக திட்டமிடலும் கவனமாக இருந்தால் அது வெற்றியும் லாபத்தையும் தரும்.
குடும்ப உறவுகளை அனுசரித்து செல்வது, நண்பர்களுடன் மரியாதை உடனான அணுகுமுறை உங்களுடைய உறவை மேம்படுத்தும். செவ்வாய் கிரகம் அனுமனுக்குரிய கிரகமாக கருதப்படுகிறார். அதனால் எந்த காலத்தில் உங்களுடைய அதிக கோபம் அல்லது வேகத்தை எதிர்த்து, சரியாக சிந்தித்து திட்டமிட்டு செய்தால் என்ன வேலையும் சரியான பலனை பெறுவதோடு, உங்களுடைய குறைந்த ஆற்றலில் அதிக பலனை பெறலாம்.
சிம்ம ராசி
![]()
சிம்ம ராசி அதிபதி சூரியன் ஆவார். சூரியன் மற்றும் செவ்வாய் நட்பு கிரகங்களாகும். இதனால் இந்த ராசியை சேர்ந்தவர்கள் மீது அனுமனின் கருணை மிகவும் அதிகமாகவே கிடைக்கும். மேலும் சிம்மராசி சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் அருளால் மிகக் கடினமான பணிகளை கூட வெற்றிகரமாக செய்து முடிக்கக்கூடிய ஆற்றலை தருவார். அதனால் நீங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு வேலைக்கான திட்டமிடல் அவசியம்.
மேலும் உங்களுடைய புத்திசாலித்தனம் மற்றும் அமைதியான சுபாவம் கடினமான சூழலை கூட சமாளிக்க உதவும். தற்பொழுது லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமைந்திருப்பது உங்களுக்கு சிறப்பான சூழலை தரும். நண்பர்களிடம் இருந்து உங்களுக்கு உதவியும், சமூகத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும்.
விருச்சிக ராசி
![]()
விருச்சிக ராசி அதிபதியான செவ்வாய் என்பதால், அனுமனின் உங்களது மீது அதிகமாகவே கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுடைய செயல்பாடுகளில் சில ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும், செவ்வாய் கிரகம் மற்றும் அனுமனின் நல்ல அருளால், உங்களுடைய சவால்களை கூட சமாளித்து சாதகமான பலன்களை பெறுவீர்கள். எந்த ஒரு பணியையும் முழு ஆர்வத்துடன், உற்சாகத்துடன் நீங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்பு உண்டு. இதனால் எடுத்துக் காரியங்கள் நல்ல வெற்றியை தரும்.
மகர ராசி
![]()
மகர ராசி நண்பர்களுக்கு செவ்வாய் கிரகம் உங்கள் ராசியில் உச்சமடைகிறார். எனவே இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அனுமனின் அருள் மிகவும் சிறப்பான பலனை தரக்கூடியதாகவே இருக்கும். உங்களுடைய நிதானமான முடிவுகளோடு எடுக்கும் துணிச்சலான செயல்பாடு வருமானத்தை ஏற்றுவதில் வெற்றி தரும். மேலும் நீங்கள் சந்தித்து வரக்கூடிய நிதி சிக்கல்கள் விலகும். திருமண வாழ்க்கையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
எதிரிகளிடமிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவு படுத்த நீங்கள் பெற நினைக்கும் கடன் தொகை உங்களுக்கு கிடைக்கும். நிதானமான செயல்பாடு மற்றும் கடினமான முயற்சிகள் உங்கள் வேலையை முடிக்க சாதகமான சூழ்நிலை தரும்.