கொழும்பு – யாழ்ப்பாணம் பயணத்தின் போது நேர்ந்த விபத்து! இரண்டு இ.போ.ச பேருந்துகள் மோதி அதிர்ச்சி!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இரண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்து இன்று (நவம்பர் 15) வவுனியா மாவட்டத்தின் பேயாடி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தைத் தொடர்ந்து இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மாற்றுப் பேருந்துகள் மூலம் தங்களது பயணத்தைத் தொடர அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டதால், பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.