யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை ப***லியெடுத்த சம்பவம் ; அரங்கேறிய ஆள்மாறாட்டம் அம்பலம்

யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை ப***லியெடுத்த சம்பவம் ; அரங்கேறிய ஆள்மாறாட்டம் அம்பலம்

யாழ்ப்பாணத்தில் வி**பத்தினை ஏற்படுத்தி , குடும்பஸ்தர் மற்றும் அவரது மகனின் உயிரிழப்புக்கு காரணமான நபர், ஆள் மாறாட்டம் செய்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த விபத்தின் போது வாகனத்தை செலுத்திய சாரதி தான் என பொலிஸாரிடம் சரணடைந்த நபர் மதுபோதையில் இருந்தமை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் , அவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதியான விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையையும் , மகனையும் கே.டி.எச் வாகனம் மோதியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி மத்துவில் தெற்கை சேர்ந்த செல்வத்துரை செல்வராஜ் (வயது 51) அவரது மகனான செல்வராஜ் டிசாந்த் (வயது 09) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர் விபத்து சம்பவத்தினை அடுத்து வாகனத்தில் இருந்தவர்கள் , வாகனத்தை கைவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில் , வாகன சாரதி உட்பட வாகனத்தில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அன்றைய தினம் இரவே மட்டுவிலை சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் தானே வாகன சாரதி என பொலிசாரிடம் சரணடைந்த நிலையில் , அவரை கைது செய்து , சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் , முதல்கட்டமாக மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டது.