வடக்கு – கிழக்கில் பொதுமக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் சுட்டிக்காட்டு

வடக்கு – கிழக்கில் பொதுமக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வில்லை! நாடாளுமன்றில் ரவிகரன் சுட்டிக்காட்டு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு இதுவரை முறையான தீர்வு எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் தங்களது பூர்வீகக் காணிகளில் மீள்குடியேறுவதற்கும், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பல்வேறு தடைகள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வடக்கு – கிழக்கு மக்களின் காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரத் தீர்வை வழங்கி, அவர்களின் காணிகளை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது