போலி வங்கி இணையதளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி; 25 வயது இளைஞர் கைது

போலி வங்கி இணையதளம் மூலம் 10 இலட்சம் ரூபாய் மோசடி; 25 வயது இளைஞர் கைது

தனியார் வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, தனிநபரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வாரியபொல கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வங்கியின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி, அதன் மூலம் தனிநபரின் வங்கிக் கணக்கு உள்நுழைவு விபரங்களைப் பெற்று பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் நிறுவனமொன்றின் தரவு உள்ளீட்டு அதிகாரி நேற்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.