யாணழில் பிறந்தநாள் நிகழ்வில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது; உபகரங்கள் பறிமுதல்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் அனுமதியின்றி ட்ரோன் மூலம் காணொளி பதிவு செய்ய முயன்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வு நேற்று (26) வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணியில் நடைபெற்றது.
இதன்போது, நிகழ்வினை ட்ரோன் மூலம் காணொளி பதிவு செய்ய முற்பட்ட இளைஞனை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்ததுடன், அவருடைய ட்ரோன், கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்கள் சான்றுப் பொருட்களாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.